அறிமுகம்

இந்த ஆவணத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன:

  • வெளியீட்டு அறிக்கை மேம்படுத்தல்கள்

  • நிறுவல் தொடர்பான குறிப்புகள்

  • வசதிகள் மேம்படுத்தல்கள்

  • இயக்கி மேம்படுத்தல்

  • கர்னல் தொடர்புடைய மேம்படுத்தல்கள்

  • வேறு மேம்படுத்தல்கள்

  • தொழில்நுட்ப முன்பார்வைகள்

  • தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

  • தெரிந்த பிரச்சனைகள்

Red Hat Enterprise Linux 5.1 இன் சில மேம்படுத்தல்கள் இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. வெளியீட்டு அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பின்வரும் URLல் பார்க்கவும்:

http://www.redhat.com/docs/manuals/enterprise/

வெளியீட்டு அறிக்கை மேம்படுத்தல்கள்

இந்தப் பிரிவு Red Hat Enterprise Linux 5.1 பற்றிய தகவல்களை கொண்டிருக்கும் ஆனால் இந்த விநியோகத்தில் வெளியீட்டு அறிக்கையில் சேர்க்கப்படாது.

  • Red Hat Enterprise Linux 5 ஐ முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட SMP விருந்தினரில் நிறுவும் போது, நிறுவல் நிறுத்தப்படலாம். இதற்கு காரணம் புரவலன் (dom0) Red Hat Enterprise Linux 5.1ஐ இயக்கும் போது ஏற்படுகிறது.

    இதனை தடுக்க, விருந்தினரை ஒரு ஒற்றை செயலியை நிறுவலை பயன்படுத்தி அமைக்கவும். நீங்கள் --vcpus=1 விருப்பத்தைப் பயன்படுத்தி virt-install இல் செய்யலாம். நிறுவல் முடிந்தவுடன், நீங்கள் விருந்தினரை SMPக்கு அமைத்து ஒதுக்கப்பட்ட vcpus virt-managerஇல் மாற்றலாம்.

  • இந்த வெளியீடு WBEMSMT ஐ கொண்டுள்ளது, இது சம்பா மற்றும் DNSக்கு வழங்கப்பட்ட பயனர் தோழமையுடன் மேலாண்மை செய்ய கொடுக்கப்பட்ட இணைய அடிப்படையான பயன்பாடுகள். WBEMSMT பற்றிய மேலும் விவரங்களுக்கு, http://sblim.wiki.sourceforge.net/ஐ பார்க்கவும்.

  • pm-utilsஐ ஒரு from a Red Hat Enterprise Linux 5.1 பீட்டா பதிப்பில் மேம்படுத்தினால் pm-utils ஐ செயலிழக்கப்பட்டு, பின்வரும் பிழையைக் கொடுக்கிறது:

    பிழை: /etc/pm/sleep.d: cpio: rename கோப்பில் பொதிவு நீக்குதல் காப்பு செயலிழக்கப்பட்டது
    

    இது ஏற்படுவதை தவிர்க்க, /etc/pm/sleep.d/ அடைவை மேம்படுத்தும் முன் அழிக்கவும். /etc/pm/sleep.d எந்த கோப்புகளையும் கொண்டால், நீங்கள் அந்த கோப்புகளை /etc/pm/hooks/க்கு நகர்த்தலாம்.

  • Mellanox MT25204க்கு வன்பொருள் சோதனையில் சில அதிக பளு நிலையில் உள்ளார்ந்த பிழை ஏற்படுவது தெரிந்தது. ib_mthca இயக்கி இந்த வன்பொருளின் ஒருபேரழிவு பிழையை அறிக்கையிடும் போது, அது போதிய முடிவு வரிசை இல்லாமல் ஏற்கனவே பயனர் பயன்பாட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் பணி கோரிக்கைகளுக்கு தொடர்புடையதாக இருக்கும்

    இயக்கி வன்பொருளை மறுஅமைவு செய்து அந்த நிகழ்விலிருந்து மீட்கும், பிழையின் போது அனைத்து இருக்கும் இணைப்புகளும் இழக்கப்படும். இது பயனர் பயன்பாட்டில் பிரிவு தவற்றை கொடுக்கும், மேலும், opensm பிழை ஏற்படும் போது இயங்கினால், அது சரியாக இயங்க கைமுறையாக மறுதுவக்கம் செய்யப்பட வேண்டும்.

  • இயக்கி மேம்படுத்தல் வட்டுகள் இப்போது Red Hatஇன் இயக்கி மேம்படுத்தல் நிரல் RPM-அடிப்படையான தொகுப்பில் துணைபுரிகிறது. ஒரு இயக்கி வட்டு புதிய வடிவத்திற்கு துணைபுரிந்தால், RPM தொகுக்கப்பட்ட இயக்கிகளை கணினி மேம்படுத்தல்களுக்கு சேர்க்க வாய்ப்புள்ளது.

    இயக்கி RPMகள் முன்னிருப்பு கர்னல் மாறியில் மட்டும் நிறுவப்பட்ட கணினியில் நகலெடுக்க முடியும் என்பதை குறித்து கொள்ளவும். எடுத்துக்காட்டாக ஒரு RPM இயக்கியை மெய்நிகராக்கப்பட்ட கர்னல் இயங்கும் கணினியில் நிறுவினால் மெய்நிகராக்கப்பட்ட கர்னலுக்கு மட்டும் நிறுவப்படும். இயக்கி RPM கணினியில் வேறு நிறுவப்பட்ட கர்னல் மாறியில் நிறுவப்படாது.

    எனினும், பல கர்னல் மாறிகளை நிறுவிய கணினியில், நீங்கள் ஒவ்வொரு கர்னல் மாறிக்கும் துவக்கி இயக்கி RPMஐ நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் கணினி bare-metal மற்றும் மெய்நிகராக்கப்பட்ட கர்னல்களை நிறுவியிருந்தால், உங்கள் கணினியைbare-metal கர்னலை கொண்டு துவக்கி இயக்கி RPM ஐ நிறுவ வேண்டும். பின், கணினியை மெய்நிகராகப்பட்ட கர்னலுக்கு மறுதுவக்கி இயக்கி RPMஐ மீண்டும் நிறுவ வேண்டும்.

  • dom0இன் வாழ்நாளில், நீங்கள் விருந்தினரை 32,750க்கு மேல் உருவாக்க முடியாது (அதாவது xm create) எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு லுப்பில் விருந்தினர் மறுதுவக்கப்பட்டால், dom0 எந்த விருந்தினரையும் 32,750 தடவை மொத்தம் விருந்தினரை மறுதுவக்கம் செய்த பின் செயலிழக்க செய்யும்.

    இந்த நிகழ்வு ஏற்பட்டால், dom0ஐ மீண்டும் துவக்கவும்

  • Red Hat Enterprise Linux 5.1 NFS சேவையகம் இப்போது குறிப்பு ஏற்றுமதிகளுக்கு துணைபுரிகிறது. இந்த ஏற்றுமதிகள் NFSv4 நெறிமுறையை அடிப்படையாக இருக்கும். எந்த NFS கிளையனும் இந்த விரிவாக்கத்திற்கு துணைபுரியாதது (5.1க்கு முன் வெளியிடப்பட்டது Red Hat Enterprise Linuxஎன பெயரிடப்பட்டது) இந்த ஏற்றுமதிகளை அணுக முடியாது.

    எனினும், ஒரு NFS கிளையன் இந்த ஏற்றுமதிகளுக்கு துணைபுரியவில்லையெனில், இந்த ஏற்றுமதிகளை அணுக ஒரு I/O பிழை ஏற்படலாம். இந்த சமயத்தில் கிளையன் செயல்படுத்தலின் படி இந்த செயலிழப்பு கணினி அழிக்கப்படும் படி அதிகமாக இருக்கலாம்.

    NFS குறிப்பு ஏற்றுமதிகள் கிளையன்களில் அணுக துணைபுரியாது என்பதை அறிந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது முக்கியமானதாகும்.

  • GFS2 என்பது GFSஇன் கூடுதல் பின்னிணைப்பாகும். இந்த மேம்பாடு பல குறிப்பிட்ட மேம்படுத்தல்களை கொண்டு கோப்பு முறைமை வடிவத்தை மாற்ற உதவுகிறது. GFS கோப்பு முறைமையை GFS2க்கு gfs2_convertஐ பயன்படுத்தி மாற்றுகிறது, இது GFS கோப்பு முறைமைக்கு ஏற்றவாறு மெட்டா டேட்டாவுக்கு மேம்படுத்துகிறது.

    GFS2 Red Hat Enterprise Linux 5 இல் அறிமுகப்படுத்தியதிலிருந்து நன்றாக மேம்படுத்தப்பட்டு ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக வெளியிடப்பட்டுள்ளது, வெளியீட்டு அறிக்கையில் GFS2 முழுவதும் துணைபுரிகிறது என தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், Benchmark சோதனைகள் பின்வருவனவற்றில் வேகமான செயல்திறனை கொண்டிருக்கும்:

    • ஒரு ஒற்றை அடைவில் அதிக அளவில் மற்றும் வேகமாக வருடுகிறது (Postmark benchmark)

    • ஒருங்கிணைந்த I/O செயல்பாடுகள் (fstest benchmark சோதனை TIBCO போன்று மேம்பட்ட செயல்திறனை குறிக்கும்)

    • இங்கு பூட்டுதல் இல்லாததால், இடையகம் வாசித்தது

    • நேரடி I/O முன் ஒதுக்கப்பட்ட கோப்புகளில்

    • NFS தேடுதலை கையேளும்

    • df, ஒதுக்கீடு தகவல் இப்போது இடையகப்படுத்தப்படும்

    கூடுதலாக, GFS2 பின்வரும் மாற்றங்களை கொண்டுள்ளது:

    • journals இப்போது மெட்டாடேட்டாவுக்கு பதிலாக வெற்று (மறைவான) கோப்புகளாக இருக்கும். Journals இப்போது கூடுதல் சேவையகங்களாக ஒரு கோப்பு முறைமையை மாறும் படி சேர்க்கிறது.

    • கோட்டாக்கள் இப்போது mount விருப்பத்தால் செயல்படுத்தப்படும் மற்றும் செயல்நீக்கப்படும்quota=<on|off|account>

    • quiesce ஒரு கொத்திடலில் ஒரு இதழ்களை மீண்டும் கொண்டுவர தேவையில்லை

    • நெனோவிநாடி நேரம் காட்டி இப்போது துணைபுரிகிறது

    • ext3, GFS2 போல இப்போது data=ordered முறையும் துணைபுரிகிறது

    • அளவுரு அமைவுகள் lsattr() மற்றும் chattr() இப்போது தரப்படுத்தப்பட்ட ioctl() வழியாக துணைபுரிகிறது

    • 16TBக்கு அதிகமாக அளவுள்ள கோப்பு முறைமை அளவுகள் இப்போது துணைபுரிகிறது

    • GFS2 ஒரு தரப்படுத்தப்பட்ட கோப்பு முறைமை மற்றும் இது கொத்திடல் இல்லாத கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படலாம்

  • Red Hat Enterprise Linux 5.1ஐ HP BL860c ப்ளேட் கணினிகளில் நிறுவினால் IP தகவல் கோரும் போது செயலிழக்கப்படும். இதற்கு நீங்கள் OKவை இரு முறை TCP/IP கட்டமைத்தல் திரையில் தேர்ந்தெடுக்கும் போது ஏற்படுகிறது.

    இது ஏற்பட்டால், மறுதுவக்கம் செய்து ஈத்தர்நெட் தானியக்கத்தை செயல்நீக்கம் செய்து நிறுவல் செய்யவும். இதனை செய்ய, ethtool="autoneg=off" என்ற அளவுருவை ஊடகத்திலிருந்து நிறுவலை துவக்கும் போது பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் கடைசி நிறுவப்பட்ட கணினியை பாதிக்காது.

  • nohide ஏற்றுமதி விருப்பம் குறிப்பு ஏற்றுமதிகளுக்கு தேவைப்படுகிறது (அதாவது, ஒரு குறிப்பு சேவையகத்தை குறிக்கும் ஏற்றுமதிகள்). ஏனெனில் குறிப்பு ஏற்றுமதிகளுக்கு "cross over" க்கு ஒரு பிணைப்பு ஏற்றப்புள்ளி தேவை. nohide ஏற்றுமதி விருப்பத்திற்கு ஒரு "cross over" முடிக்க தேவைப்படுகிறது.

    இணைப்பு ஏற்றல்களின் மேலும் விவரங்களுக்கு, man exports 5ஐ பார்க்கவும்.

  • இந்த மேம்படுத்தல் lvm2 நிகழ்வு கண்காணித்தல் டீமனை உள்ளடக்கியுள்ளது. நீங்கள் ஏற்கனவே lvm2 பிரதிபலிப்பை பயன்படுத்தினால், பின்வரும் படிநிலை பின்பற்றி அனைத்து கண்காணித்தல் செயல்பாடுகளும் சரியாக மேம்படுத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்:

    1. அனைத்து பிரதிபலிக்கப்பட்ட lvm2 தருக்க தொகுதிகளை மேம்படுத்தும் முன் செயல்நீக்கம் செய்யவும். இதனை செய்ய, lvchange -a n <volume group or mirrored volume> கட்டளையைப் பயன்படுத்தவும்.

    2. பழைய lvm2 நிகழ்வு டீமானை killall -HUP dmeventdஐ பயன்படுத்தி நிறுத்தவும்.

    3. device-mapper மற்றும் lvm2 என பெயரிடப்பட்ட, அனைத்து தொடர்புடைய RPM தொகுப்புகளுக்கு மேம்படுத்தல் செய்யவும்.

    4. lvchange -a y <volume group or mirrored volume> ஐ பயன்படுத்தி அனைத்து பிரதிபலிப்பு தொகுதிகளையும் மீண்டும் செயல்படுத்தவும்.

  • Rapid Virtualization Indexing (RVI) இப்போது 64-bit, 32-bit, மற்றும் 32-bit PAE கர்னல்களுக்கு துணைபுரிகிறது. எனினும், RVI 32-bit விருந்தினர் மெய்நிகர் முகவரிகளை 32-bit PAE hypervisorஇல் மட்டும் மாற்றுகிறது.

    எனினும், ஒரு விருந்தினர் ஒரு PAE கர்னலை 3840MBக்கும் அதிகமான ரேமில் பயன்படுத்தினால், தவறான முகவரி மாற்ற பிழை ஏற்படும். இது விருந்தினரை அழிக்கலாம்.

    நீங்கள் 64-bit கர்னலை பயன்படுத்தி 4GB பருநிலை ரேமுக்கு அதிகமாக RVI இன் கீழ் இயக்க பரிந்துரைக்கப்படுகிறது.

  • 16 கோர்கள் அல்லது அதற்கு மேல் AMD Rev F செயலிகளை பயன்படுத்தி இயக்கும் போது முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர் நிறுவல்களில் கணினி மறுஅமைவு செய்யப்படும்.

  • systemtap-runtime தொகுப்பை நிறுவி systemtap தொகுப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டால் ஒரு பரிமாற்று சோதனை பிழை ஏற்படும். மேலும் Red Hat Enterprise Linux 5 இலிருந்து 5.1 க்கு மேம்படுத்தினால் systemtap தொகுப்பு ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் செயலிழக்கப்படும்.

    எனினும், systemtap தொகுப்பை rpm -e systemtap-0.5.12-1.e15 ஐ பயன்படுத்தி systemtap-runtimeஐ நிறுவும் முன் அல்லது மேம்படுத்தலை செய்யும் முன் நீக்கவும்.

  • NFSROOTஐ அமைக்கும் போது, BOOTPROTO BOOTPROTO=dhcp என /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0இல் அமைக்கப்பட வேண்டும்.

    உங்கள் சூழல் ஒரு வேறுபட்ட அமைவை BOOTPROTOக்கு தேவைப்படுத்தினால், தற்காலிக அமைவு BOOTPROTO=dhcp /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0இல் ஆரம்பத்தில் initrdஐ உருவாக்கும் முன் செய்யவேண்டும். நீங்கள் BOOTPROTOஇன் அசல் மதிப்பை initrd உருவாக்கப்பட்ட பின் மறுஅமைவு செய்யலாம்.

  • IBM Bladecenterக்கு QLogic iSCSI Expansion Card ஈத்தர்நெட் மற்றும் iSCSI ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் கொடுக்கிறது. இந்த அட்டையில் சில பகுதிகள் இரண்டு செயல்பாடுகளில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனினும், நடப்பு qla3xxx மற்றும் qla4xxx அடைவுகள் ஈத்தர்நெட் மற்றும் iSCSI செயல்பாடுகளை தனித்தனியாக துணைபுரியும். ஆனால் இரண்டு இயக்கிகளும் ஈத்தர்நெட் மற்றும் iSCSI செயல்பாடுகளுக்கு ஒரே நேரத்தில் துணை புரியாது.

    எனினும், ஈத்தர்நெட் மற்றும் iSCSI ஒரே நேரத்தில் செயல்பாட்டால் சாதனத்தை செயலிழக்க செய்யும். இது தரவு இழப்பு மற்றும் கோப்பு முறைமை அழித்தல் போன்றவற்றை iSCSI சாதனங்களில் செய்யும் அல்லது வேறு ஈத்தர்நெட் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட பிணைய இழப்பு ஏற்படலாம்.

  • virt-managerஐ பயன்படுத்தும் போது ஏற்கனவே இருக்கும் விருந்தினருக்கு வட்டுகளை சேர்க்கும் போது, இரட்டை உள்ளீடுகள் விருந்தினரின் /etc/xen/<domain name> கட்டமைப்பு கோப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த இரட்டை உள்ளீடுகள் விருந்தினரை துவக்குவதிலிருந்து தடுக்கும்.

    எனினும், நீங்கள் இந்த இரட்டை உள்ளீட்டை நீக்க வேண்டும்.

  • ஒரு விருந்தினர் கணினியை இரண்டு புரவலன்கள் இடையே தொடர்ந்து மாற்றுவது ஒரு புரவலனில் பீதியை ஏற்படுத்தலாம். ஒரு புரவலன் ஒரு விருந்தினர் கணினிக்கு வெளியே நகர்ந்த பின் மீண்டும் துவக்கப்பட்டால் மற்றும் நகர்ந்தலுக்கு முன் ஏற்பட்டால் பீதி ஏற்படாது.

  • sysreport sosஇல் நீக்கப்படலாம். sosஐ நிறுவ, yum install sosஐ இயக்கவும். இந்தக் கட்டளை sosஐ நிறுவி sysreportஐ நீக்குகிறது. நீங்கள் எந்த இருக்கும் கிக்ஸ்டார்ட் கோப்புகளை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

    sos நிறுவிய பின், அதனை பெறsosreport கட்டளையை பயன்படுத்தவும். sysreport கட்டளையைப் பயன்படுத்தினால் sysreport இப்போது நீக்கப்படும் என ஒரு எச்சரிக்கை செய்தியை உருவாக்கும்; தொடர்ந்தால் sosreportஐ பெறும்.

    குறிப்பாக, sysreport கருவியைப் பயன்படுத்த, sysreport.legacy கட்டளையைப் பயன்படுத்தவும்.

    sosreportஐ பற்றிய மேலும் தகவலுக்கு, man sosreport மற்றும் sosreport --help ஐ பார்க்கவும்.

நிறுவல் தொடர்பான குறிப்புகள்

பின்வரும் பகுதியில் Red Hat Enterprise Linux 5.1 நிறுவல் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருக்கும் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 5 ஐ மேம்படுத்த, நீங்கள் மாற்றப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்த Red Hat Network ஐ பயன்படுத்தலாம்.

Red Hat Enterprise Linux 5.1 புதிதாக நிறுவ அனகோண்டாவை பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 4இன் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பிலிருந்து Red Hat Enterprise Linux 5.1க்கு மேம்படுத்தலாம். அனகோண்டாவும் ஏற்கனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 5ஐ மேம்படுத்த பயன்படலாம்.

  • நீங்கள் Red Hat Enterprise Linux 5 குறுவட்டுகள் உள்ளடக்கங்களை நகல் எடுக்க வேண்டுமென்றால் (எடுத்துக்காட்டாக, ஒரு பிணைய அடிப்படையான நிறுவலில்) இயக்கத்தளம் மட்டும் உள்ள குறுவட்டுக்களை மட்டும் நகலெடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும். Supplementary CD-ROM அல்லது அடுக்கிடப்பட்ட மென்பொருள் குறுவட்டுக்களை நகலெடுக்க வேண்டாம், இது அனகோண்டாவின் இயல்பான செயல்பாட்டில் கோப்புகளை மேலெழுதும்.

    Supplementary CD-ROM இன் உள்ளடக்கங்கள் மற்றும் பிற அடுக்கிடப்பட்ட குறுவட்டு மென்பொருட்கள் Red Hat Enterprise Linux 5.1 நிறுவப்பட்ட பின்னர் நிறுவப்பட வேண்டும்.

  • Red Hat Enterprise Linux 5.1ஐ ஒரு முழு மெய்நிகராக்கப்பட்ட விருந்தினராக நிறுவும் போது, kernel-xen கர்னலைப் பயன்படுத்தவில்லை. இந்த கர்னலை உங்கள் முழுமையான மெய்நிகராக்கப்பட்ட விருந்தினரில் பயன்படுத்தினால் உங்கள் கணினி செயலிழக்கப்படும்.

    நீங்கள் Red Hat Enterprise Linux 5.1ஐ நிறுவல் எண் கொண்டு ஒரு முழுமையான மெய்நிகராக்கப்பட்ட விருந்தினராக நிறுவும் போது, Virtualization தொகுப்பு குழுவை நிறுவும் போது தேர்ந்தெடுக்கக்கூடாது. Virtualization தொகுப்பு குழு விருப்பம் kernel-xen கர்னலை நிறுவும்.

    இந்த சிக்கலால் பகுதி மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்கள் பாதிக்கப்படவில்லை என குறித்து கொள்ளவும். பகுதி மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்கள் எப்போதும் kernel-xen கர்னலையே பயன்படுத்துவர்.

  • நீங்கள் Red Hat Enterprise Linux 5 இலிருந்து 5.1க்கு மெய்நிகராக்கப்பட்ட கர்னல் மூலம் மேம்படுத்தும் போது, மேம்படுத்தல் முடிந்ததும் மறுதுவக்கம் செய்ய வேண்டும். பின் நீங்கள் கணினியை மேம்படுத்தப்பட்ட மெய்நிகராக்கப்பட்ட கர்னலால் துவக்க வேண்டும்.

    Red Hat Enterprise Linux 5 மற்றும் 5.1இன் hypervisor ஆகியவை ABI-உகந்தவை அல்ல. நீங்கள் மேம்படுத்தல்களுக்கிடையே மேம்படுத்தப்பட்ட மெய்நிகராக்க கர்னலை பயன்படுத்தி மறுதுவக்கம் செய்யவில்லை எனில், மேம்படுத்தப்பட்ட மெய்நிகராக்க RPMகள் இயங்கும் கர்னல் ஒத்து போகாது.

நிறுவல் / iSCSI மென்பொருள் துவக்கிக்கு துவக்கவும் (open-iscsi)

iSCSI நிறுவல் மற்றும் துவக்கம் தொழில்நுட்ப முன்பார்வையாக Red Hat Enterprise Linux 5 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதி இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி முழுவதும் துணைபுரிகிறது.

இந்த செயல்திறன் நீங்கள் வைத்திருப்பதைப் பொருத்து மூன்று கட்டமைப்புக்களை கொண்டுள்ளது:

  • ஒரு வன்பொருள் iSCSI துவக்கியை பயன்படுத்தி (QLogic qla4xxx ஐ போன்றது)

  • open-iscsi துவக்கியை கணினியில் firmware துவக்கத்தைப் பயன்படுத்தி iSCSI க்கு துணைபுரிகிறது (iSCSI Boot Firmware போல, அல்லது Open Firmwareஇன் ஒரு பதிப்பு iSCSI துவக்க செயல்திறனுக்கு வசதி செய்கிறது)

  • open-iscsi துவக்கியை ஒரு கணினியில் firmware துவக்கும் துணையில்லாமல் iSCSIக்கு பயன்படுத்தவும்

ஒரு வன்பொருள் iSCSI துவக்கியைப் பயன்படுத்துதல்

நீங்கள் ஒரு வன்பொருள் iSCSI துவக்கியை பயன்படுத்தினால், நீங்கள் அட்டையின் BIOS அமைவு வசதியில் ஐபி முகவரியை உள்ளிட்டு மற்றும் பிற மதிப்புகளை தொலை சேமிப்பகங்களை அணுக வழங்கலாம். தொலை சேமிப்பகத்தின் தருக்க அலகுகள் Anaconda வில் தரப்படுத்தப்பட்ட sd சாதனங்களாக, கூடுதல் அமைவுகள் இல்லாமல் இருக்கும்.

நீங்கள் initiator's qualified name (IQN)ஐ தொலை சேமிப்பக சேவையகத்தை கட்டமைக்க வரையறுத்தால், நிறுவலின் போது இந்த வழிமுறையைப் பின்பற்றவும்:

  1. நிறுவலுக்கு பயன்படும் வட்டு இயக்கியில் நீங்கள் தேர்ந்தெடுத்த நிறுவியின் பக்கத்திற்கு செல்லவும்.

  2. கூடுதல் சேமிப்பக கட்டமைப்பை சொடுக்கவும்.

  3. iSCSI இலக்கை சேர்த்தல் பொத்தானை சொடுக்கவும்.

  4. iSCSI IQN அந்த திரையில் தோன்றும்.

iSCSIக்கு Firmware துவக்க சேவையுடன் ஒரு கணினியில் open-iscsiஐ பயன்படுத்தலாம்

நீங்கள் open-iscsi மென்பொருள் துவக்கியை ஒரு கணினியில் firmware துவக்க துணையுடன் iSCSIக்கு பயன்படுத்தினால், firmwareஇன் அமைவு வசதியை ஐபி முகவரி மற்றும் தொலை சேமிப்பகத்தை அணுக தேவையான வேறு மதிப்புகளை உள்ளிட வேண்டும். இந்த செய்ய கணினியை தொலை iSCSI சேமிப்பகத்திலிருந்து கட்டமைக்கிறது.

தற்போது, அனகோண்டா firmware கொண்டுள்ள iSCSI தகவலை அணுக முடியாது. அதற்கு பதிலாக, நீங்கள் கைமுறையாக ஐபி முகவரியை நிறுவலின் போது உள்ளிட வேண்டும். இதனை செய்ய, துவக்கியின் IQNஐ மேலே குறிப்பிட்ட வழிமுறையில் குறிப்பிட வேண்டும். பின்னர், அதே நிறுவி பக்கத்தில் துவக்கி IQN காட்டப்பட்டுள்ளதில் iSCSI இன் ஐபி முகவரியை உள்ளீட்டு நிறுவவும்.

iSCSI இலக்கின் ஐபி முகவரியை கைமுறையாக குறிப்பிட்ட பின், iSCSI இலக்குகளின் தருக்க அலகுகள் நிறுவலுக்காக இருக்கும். Anaconda ஆல் உருவாக்கப்பட்ட initrd iSCSI இலக்கின் IQN மற்றும் ஐபி முகவரியை கொடுக்கும்.

iSCSI இலக்கின் IQN அல்லது ஐபி முகவரி எதிர்காலத்தில் மாற்றப்பட்டால், iBFT அல்லது Open Firmware அமைவு வசதியை ஒவ்வொரு துவக்கியிலும் உள்ளிட்டு தொடர்புடைய மதிப்புகளை மாற்றவும். அதன் பின் ஒவ்வொரு துவக்கிக்கும் பின்வருமாறு initrd (iSCSI சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டது) ஐ மாற்றவும்:

  1. initrdgunzip கட்டளையை பயன்படுத்தி விரிவுப்படுத்தலாம்.

  2. cpio -iஐ பயன்படுத்தி தொகுப்பு நீக்கவும்.

  3. init கோப்பில், சரம் iscsistartupஐ கொண்ட வரியைத் தேடவும். இந்த வரி IQN மற்றும் iSCSI இலக்கின் ஐபி முகவரியையும் கொண்டிருக்கும், இந்த வரியை IQN மற்றும் ஐபி முகவரி கொண்டு மேம்படுத்தவும்.

  4. initrdcpio -oஐ பயன்படுத்தி மீண்டும் தொகுப்பிடவும்.

  5. initrdgunzip ஐ பயன்படுத்தி மீண்டும் குறுக்கவும்.

Open Firmware / iBFT firmware ஆல் கொடுக்கப்பட்ட iSCSI தகவல்களை பெற இயக்கத்தளத்தின் திறனை எதிர்கால வெளியீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் initrd ஐ மாற்ற (iSCSI storageஇல் சேமிக்கப்பட்டது) நீக்க ஒவ்வொரு துவக்கியும் ஐபி முகவரி அல்லது iSCSI இலக்கின் IQN மாற்றப்படும்.

open-iscsiஐ ஒரு கணினியில் Firmware துவக்க சேவை இல்லாமல் iSCSI க்கு பயன்படுத்தவும்

நீங்கள் open-iscsi மென்பொருள் துவக்கியை கணினியில் firmware துவக்கி இல்லாமல் iSCSIக்கு பயன்படுத்தினால், ஒரு பிணைய துவக்க செயல்திறனை (PXE/tftp போன்று) பயன்படுத்தவும். இதில், முன்பு குறிப்பிட்ட அதே வழிமுறையைப் பின்பற்றி துவக்கி IQN மற்றும் iSCSI இலக்கின் ஐபி முகவரியை குறிப்பிடவும். அது முடிந்தவுடன் initrdஐ பிணைய துவக்க சேவையகத்திற்கு நகலெடுத்து கணினியை பிணைய துவக்கத்திற்கு அமைக்கவும்.

அதேபோல, ஐபி முகவரி அல்லது IQNஐ iSCSI இலக்கில் மாற்றப்பட்டால், initrd ம் அதுபோல மாற்றப்பட வேண்டும். இதனை செய்ய, முன்பு செய்த அதே செயல் ஒவ்வொரு துவக்கிக்கும் initrdஇல் மாற்ற வேண்டும்.

வசதிகள் மேம்படுத்தல்கள்

Ext3க்கான விரிவாக்கம்

EXT3இன் அதிகபட்ச கொள்ளளவு இப்போது 16TBக்கு அதிகரிக்கப்பட்டது (8TBஇலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது). இந்த விரிவாக்கம் Red Hat Enterprise Linux 5 இல் தொழில்நுட்ப முன்பார்வையாக இருந்து, இப்போது முழுமையாக துணைபுரிகிறது.

yum-security

அது இப்போது yum ஐ பாதுகாப்பு மேம்படுத்தலுக்கு மட்டும் வரையறைப்படுத்த முடியும். இதனை செய்ய, yum-security கூடுதல் இணைப்பை நிறுவி பின்வரும் கட்டளையை இயக்கவும்:

yum update --security

ஒரு மூலத்தை தனியாக மீண்டும் துவக்கிக்கொள்ளவும்

ஒரு கொத்திடலில் அதன் தாய் சேவையை ஒன்றும் செய்யாமல் ஒரு மூலத்தை மீண்டும் துவக்க முடியும். இது /etc/cluster/cluster.confஇல் கட்டமைக்க __independent_subtree="1" அளவுருவைப் பயன்படுத்தி இயங்கும் முனையில் ஒரு தனித்த மூலத்தை கொண்டுளது.

எடுத்துக்காட்டாக:

<service name="example">
        <fs name="One" __independent_subtree="1" ...>
                <nfsexport ...>
                        <nfsclient .../>
                </nfsexport>
        </fs>
        <fs name="Two" ...>
                <nfsexport ...>
                        <nfsclient .../>
                </nfsexport>
                <script name="Database" .../>
        </fs>
        <ip/>
</service>

இங்கு, இரண்டு கோப்பு முறைமை மூலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன: One மற்றும் Two. One செயலிழக்கப்பட்டால், இது Twoஐ ஒன்றும் செய்யாமல் மீண்டும் துவங்கும். Two செயலிழக்கப்பட்டால், அனைத்து கூறுகளும் (One, Oneஇன் சேய்கள் மற்றும் Twoஇன் சேய்கள்) மீண்டும் துவங்கும். கொடுக்கப்படாத நேரத்தில் Two மற்றும் அதன் சேய்களின் சார்புகள் One மூலம் கொடுக்கப்படும்.

Sambaக்கு குறிப்பிட்ட சேவை வடிவம் தேவைப்படுகிறது என்பதை குறித்து கொள்ளவும் மற்றும் இவை தனிப்பட்ட துணை கிளைகளாக பயன்படுத்த முடியாது. இது மற்ற மூலங்களுக்கும் உண்மையாக இருக்கும், எனவே __independent_subtree="1" அளவுரு எச்சரிக்கையாக பயன்படுத்தவும்.

மெய்நிகராக்கம்

பின்வரும் மெய்நிகராக்க மேம்படுத்தல்களும் இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது:

  • மெய்நிகராக்கப்பட்ட கர்னல் இப்போது kdump செயல்பாட்டை பயன்படுத்தலாம்.

  • AMD-V இந்த வெளியீட்டில் துணைபுரிகிறது. இது முழு மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்களுக்கு செயற்கள நகர்த்தலை செயல்படுத்துகிறது.

  • மெய்நிகராக்கப்பட்ட கர்னல் இப்போது 16ஜிபி ரேம் வரை துணைபுரியும்.

  • in-kernel socket API இப்போது விரிவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிழை விருந்தனர்களுக்கிடையே sctp ஐ இயக்கும் போது ஏற்பட்டதை சரி செய்தது.

  • மெய்நிகர் பிணையம் இப்போது libvirtஇன் ஒரு பகுதியாக உள்ளது மெய்நிகராக்க நூலகம் ஆகும். libvirt ஒரு மெய்நிகர் NAT/routerஐ உருவாக்க சில கட்டளைகளை கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட பிணைய அனைத்து உள்ளமை விருந்தினருக்கும் ஒரு கணினியில் இருக்கும். இது விருந்தினருக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது மடிக்கணினியில் மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெய்நிகர் பிணைய செயல்திறன் dnsmasqஇல் ஒரு சார்பினை சேர்க்கிறது, இது மெய்நிகர் பிணையத்தில் dhcpஐ கையாளும் என்பதைக் குறித்து கொள்ளவும்.

    libvirtபற்றிய மேலும் விவரங்களுக்கு, http://libvirt.orgஐ பார்க்கவும்.

  • libvirt இப்போது செயலிலில்லாத மெய்நிகர் கணினிகளை மேலாண்மை செய்கிறது. libvirt இதனை குறிப்பிடும் மற்றும் குறிப்பிடாத செயற்களங்களில் அவற்றை நிறுத்தாமலும், துவக்காமலும் செய்கிறது. இந்த செயல்பாடு virsh define மற்றும் virsh undefine கட்டளைகளை போல இருக்கும்.

    இந்த மேம்படுத்தல் Red Hat மெய்நிகர் கணினி மேலாளரை அனைத்து இருக்கும் விருந்தினர்களை காட்ட அனுமதிக்கிறது. இது உங்கள் இந்த விருந்தினர்களை நேரடியாக GUIயிலிருந்து துவக்க அனுமதிக்கிறது.

  • kernel-xen தொகுப்பை நிறுவிய பின், தவறான / முடிக்கப்படாத elilo.conf உள்ளீடுகளுக்கு எடுத்து செல்லாது

  • முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்கள் இப்போது லைவ் மைகிரேஷனுக்குத் துணைபுரிகிறது

  • இப்போது xm create கட்டளை virt-managerஇல் வரைகலையை கொண்டிருக்கிறது.

  • Nested Paging (NP) இப்போது துணைபுரிகிறது. இந்த வசதி மெய்நிகராக்க சூழலில் நினைவக மேலாண்மை சிக்கல்களை குறைகிறது. கூடுதலாக, NP CPU வசதியை அவசர-நினைவக விருந்தினர்களிலும் குறைக்கிறது.

    தற்போது, NP முன்னிருப்பாக செயல்படுத்தப்படுவதில்லை. உங்கள் கணினி NPக்கு துணைபுரிந்தால், நீங்கள் NPஐ செயல்படுத்த hypervisorஇல் hap=1 என மதிப்பு கொடுக்கவும்.

பகிரப்பட்ட பக்க அட்டவணைகள்

Shared page tables இப்போது hugetlb நினைவகத்தில் துணை புரிகிறது. இது பக்க அட்டவணை உள்ளீட்டை பல பணிகளில் பகிர செயல்படுத்தப்படுகிறது.

பக்க அட்டவணை உள்ளீடுகளை பல கணினிகளில் பகிரும் போது இடைய அளவு குறைவாக இருக்கும். இது பயன்பாட்டு இடையக விகிதத்தை மேம்படுத்தி, பயன்பாட்டு செயல்திறனை அதிகரிக்கும்.

divider

divider=<value> விருப்பம் ஒரு sysfs மதிப்புருவாகும் இது கணினி கடிகாரத்தின் விகிதத்தை சரி செய்து HZ நேர மதிப்பை பயனர் பயன்பாட்டிற்கு கொடுக்கிறது.

divider= விருப்பத்தைப் பயன்படுத்தினால் நீங்கள் CPU வின் மேலாணையை குறைந்து நேர செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரிக்க உங்களை அனுமதிக்கிறது. இது மெய்நிகராக்கப்பட்ட சூழலுகளில் சில பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயனுள்ள <values> தரப்படுத்தப்பட்ட 1000Hz கடிகாரத்திற்கு:

  • 2 = 500Hz

  • 4 = 250Hz

  • 10 = 100Hz (Red Hat Enterprise Linuxஇன் முந்தைய வெளியீட்டில் பயன்படுத்தப்பட்ட மதிப்பு)

Note that the virtualized kernel uses a 250HZ clock by defaul. As such, it does not need the divider= option either in dom0 or in paravirtualized guests.

dm-multipath சாதனங்களுக்கு நிறுவுதல்

அனகோண்டா இப்போது dm-multipath சாதனங்களில் கண்டறிதல், உருவாக்குதல் மற்றும் நிறுவலை செய்கிறது. இந்த வசதியை செயல்படுத்த mpath அளவுருவை கர்னல் துவக்க வரியில் சேர்க்கவும்.

இந்த வசதி முதலில் Red Hat Enterprise Linux 5 இல் தொழில்நுட்ப முன்பார்வையாக அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது இந்த வெளியீட்டில் முழுவதும் துணைபுரிகிறது.

dm-multipathம் Dell MD3000க்கு உள்பெட்டி வசதியை கொண்டுள்ளது என்பதைக் குறித்து கொள்ளவும். எனினும், பல முனைகள் dm-multipathஐ பயன்படுத்துவது MD3000 ஐ அணுகி உடனடியாக செயல்படாது.

மேலும், நீங்கள் தனிபயன் பகிர்வு முகப்பை அனகோண்டாவில் பல பாதைகள் மற்றும் பல பாதைகள் அல்லாத சாதனங்களை உங்கள் கணினி கொண்டிருந்தால், அதனை பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது. தானியக்க பகிர்வு செய்தல் என்பதை பயன்படுத்தி இரண்டு வகையான சாதனங்களையும் ஒரே தருக்க தொகுதி குழுக்களில் உருவாக்கலாம்.

இப்போது, இந்த வசதிக்கு பின்வரும் தடங்கல்கள் உள்ளன:

  • ஒரே ஒரு பாதை Logical Unit Number (LUN)ஐ துவக்க இருந்தால், Anaconda SCSI சாதனத்திற்கு mpath என குறிக்கப்பட்டிருந்தால் நிறுவுகிறது. நீங்கள் பல பாதைகளை செயல்படுத்தி LUNஐ துவக்கி initrdஐ மீண்டும் உருவாக்கினால், இயக்கத்தளம் dm-multipath சாதனத்திற்குப் பதிலாக SCSI சாதனத்தில் துவங்கும்.

    எனினும், துவக்க LUNக்கு பல பாதைகள் இருந்தால், கர்னல் துவக்க வரியில் mpath குறிப்பிடப்பட்டு பின், அனகோண்டா சரியாக தொடர்புடைய dm-multipath சாதனத்தில் நிறுவுகிறது.

  • முன்னிருப்பாக, user_friendly_names yes என multipath.confஇல் அமைக்கப்பட்டிருக்கும். இது dm-multipath ரூட் சாதனத்தில் தேவையான ஒரு அமைவாகும். எனவே, user_friendly_names no என அமைத்து initrd ஐ மீண்டும் உருவாக்கினால் பின்வரும் பிழையுடன் துவக்க பிழை ஏற்படும்:

    கோப்பு முறைகளை சரி பார்க்கிறது
    fsck.ext3: /dev/mapper/mpath0p1 ஐ திறக்கும் போது இதுபோல கோப்பு அல்லது அடைவு இல்லை
    
Storage Area Network (SAN)இலிருந்து துவக்குதல்

ஒரு SAN வட்டு சாதனத்தை துவக்க இப்போது சேவை வழங்கப்படுகிறது. இதில், SAN ஒரு Fibre Channel அல்லது iSCSI முகப்பை குறிக்கும். இந்த செயல்திறன் system-to-storage இணைப்பு dm-multipathஐ பயன்படுத்தி பல வழிகளில் துணைபுரிகிறது.

பல host bus adapters (HBA)ஐ பயன்படுத்தும் கட்டமைப்புகளில், நீங்கள் கணினி BIOSஐ நடப்பு தகவி செயலிழக்கப்பட்டால், வேறு தகவியிலிருந்து அமைக்க வேண்டும்.

இயக்கி மேம்படுத்தல் நிரல்

Driver Update Program (DUP) மூன்றாம் நபர் விற்பனையாளர்களை (OEMs போன்று) அவர்களின் சொந்த சாதன இயக்கிகள் மற்றும் வேறு லினக்ஸ் கர்னல் தொகுதியை Red Hat Enterprise Linux 5 கணினிகளுக்கு RPM தொகுப்புகளை பகிர்வாக சேர்க்கலாம்.

Red Hat Enterprise Linux 5.1 பல மேம்படுத்தல்களை DUPக்கு செயல்படுத்தும்:

  • install-time இயக்கி மேம்படுத்தல் RPMகள் இயக்கி மேம்படுத்தல் வட்டுகள் வழியாக இப்போது துணைபுரிகிறது

  • bootpath இயக்கி மேம்படுத்தல்கள் கணினி bootpathகளை பாதிப்படைய செய்தது இப்போது துணைபுரிகிறது

  • மூன்றாம் நபரால் தொகுக்கப்பட்ட Advanced Linux Sound Architecture (ALSA) சேவை இப்போது நீக்கப்பட்டது

மேலும், பல்வேறு மேம்படுத்தல்கள் அங்கீகரிக்கப்பட்ட கர்னல் ABI குறியீடு செயல்படுத்தப்பட்டிருக்கும். இந்த பட்டியல்கள் தொகுக்கும் இயக்கிகளால் பயன்படுத்தப்பட்டு குறியீடுகள் மற்றும் கர்னலால் கொடுக்கப்படும் தரவு வடிவங்களை மூன்றாம் நபர் இயக்கியாக பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு, http://www.kerneldrivers.org/RedHatKernelModulePackagesஐ பார்க்கவும்.

இயக்கி மேம்படுத்தல்கள்

பொதுவான இயக்கி மேம்படுத்தல்கள்
  • acpi: மேம்படுத்தப்பட்ட ibm_acpi தொகுதி பல ACPI மற்றும் docking station சிக்கல்களை லினோவா மடிக்கணினிகளில் அறிக்கையிடுகிறது.

  • ipmi: வன்பொருள் இடைஞ்சல் இருந்தால் ஒரு Baseboard Management Controllerக்கு kthread இயங்காது.

  • sata: SATA/SAS பதிப்பு 2.6.22-rc3க்கு மேம்படுத்தப்பட்டது.

  • openib மற்றும் openmpi: OFED (OpenFabrics Enterprise Distribution) பதிப்பு 1.2 க்கு மேம்படுத்தப்பட்டது.

  • powernow-k8: பதிப்பு 2.0.0 மேம்படுத்தப்பட்டது Greyhound முழுவதும் சேவையளிக்கப்படுகிறது.

  • xinput: முழு RSA சேவையை செயல்படுத்த சேர்க்கப்பட்டுள்ளது.

  • aic94xx: பதிப்பு 1.0.2-1க்கு மேம்படுத்தப்பட்டது, embedded sequencer firmware ஐ v17க்கு மேம்படுத்தும். இந்த மேம்படுத்தல்கள் பின்வரும் மாற்றங்களை கொண்டிருக்கும்:

    • விரிவாக்கத்துடன் திருத்தப்பட்ட ascb ரேஸ் தளங்களில் உள்ளது

    • REQ_TASK_ABORT மற்றும் DEVICE_RESET கையாளுதல்கள் சேர்க்கப்பட்டது

    • ஒரு பிழை கண்டுபிடிக்கப்பட்ட பின் இப்போது பருநிலை துறைகள் சரியாக வேலை செய்கிறது

    • phys இப்போது sysfs வழியாக செயல்படுத்த மற்றும் செயல்நீக்கம் செய்யப்படுகிறது

    • DDB பூட்டின் விரிவாக்கப்பட்டது DDBஇன் போட்டி நிபந்தனையை தவிர்க்கிறது

கேட்பொலி

ALSA பதிப்பு 1.0.14க்கு மேம்படுத்ததப்பட்டது. இந்த மேம்படுத்தல் பின்வரும் திருத்தங்களை கொண்டுள்ளது:

  • IBM Taroko (M50) இல் இரைச்சல் சரி செய்யப்பட்டது

  • Realtek ALC861 இப்போது துணைபுரிகிறது

  • xw8600 மற்றும் xw6600 இல் ஒலி இல்லாமை சிக்கல் சரி செய்யப்பட்டது

  • ADI 1884 Audio இப்போது துணைபுரிகிறது

  • xw4600இல் கேட்பொலி கட்டமைப்பு சிக்கல் சரி செய்யப்பட்டது

PCI
  • PCIX மற்றும் PCI-Expressக்கு அதிகபட்ச வாசிப்பு கோரும் அளவுக்கு செயல்பாட்டு அழைப்புகளை அமைக்கிறது

  • IBM System P கணினிகள் இப்போது PCI-Express hotpluggingக்கு துணைபுரிகிறது

  • தேவையான இயக்கிகள் மற்றும் PCI ID SB600 SMBusக்கு துணைபுரிகிறது

பிணையம்
  • e1000 இயக்கி: பதிப்பு 7.3.20-k2க்கு மேம்படுத்தப்பட்டு I/OAT-enabled chipsetகளுக்கு துணைபுரிகிறது.

  • bnx2 இயக்கி: பதிப்பு 1.5.11க்கு மேம்படுத்தப்பட்டு 5709 hardwareக்கு துணைபுரிகிறது.

  • B44 ஈத்தர்நெட் இயக்கி: பதிப்பு 2.6.22-rc4 க்கு பின்துறையிடப்பட்டு பின்வரும் மாற்றங்களை கொண்டுள்ளது:

    • பல endianness திருத்தங்கள் செய்யப்பட்டன

    • DMA_30BIT_MASK மாறிலி இப்போது பயன்படுத்தப்படுகிறது

    • skb_copy_from_linear_data_offset() இப்போது பயன்படுத்தப்படுகிறது

    • spin_lock_irqsave() இப்போது safer interrupt disablingக்கு வசதி செய்கிறது

    • தொடரும் போது எளிய பிழை சோதனை செய்யப்படுகிறது

    • பல பிழைத்திருத்தங்கள் multicast க்கு செயல்படுத்தப்படுகிறது

    • முந்தையது போல சிப் மறுஅமைவுக்கு நீண்ட நேரம் எடுக்கும்

  • Marvell sky2 இயக்கி: பதிப்பு 1.14க்கு மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து ifup/ifdown கட்டளைகளை கொடுக்கும் போது ஏற்பட்ட பிழை திருத்தப்பட்டது.

  • forcedeth-0.60 இயக்கி: இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது NVIDIA's MCP55 motherboard chipsetகள் மற்றும் தொடர்புடைய onboard NIC ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல அவசியமான பிழைகள் திருத்தப்பட்டுள்ளது.

  • ixgb இயக்கி: சமீபத்திய பதிப்புக்கு (1.0.126) மேம்படுத்தப்பட்டது.

  • netxen_nic இயக்கி: பதிப்பு 3.4.2-2 NetXen 10GbE பிணைய அட்டைகளுக்கு துணை சேர்க்கப்பட்டுள்ளது.

  • Chelsio 10G Ethernet Network Controller இப்போது துணைபுரிகிறது.

  • PCIக்கு சேவை சேர்க்கப்பட்டு s2io சாதனத்திற்கு பிழை சரி செய்யப்பட்டது.

  • Broadcomm wireless ethernet இயக்கி இப்போது nx6325 அட்டைக்கு PCI ID துணைபுரிகிறது.

  • ஒரு ASSERTION FAILED பிழையானது BCM4306 ஆனது ifupவழியாக துவக்கும் போது ஏற்படுவது சரி செய்யப்பட்டது.

  • ixgb இயக்கி: EEH PCI பிழை Intel 10-gigabit ஈத்தர்நெட் அட்டைக்கு துணை புரிய மேம்படுத்தப்பட்டதுமேலும் விவரங்களுக்கு, /usr/share/doc/kernel-doc-<kernel version>/Documentation/pci-error-recovery.txtஐ பார்க்கவும்.

  • qla3xxx இயக்கி: பதிப்பு 2.03.00-k3க்கு மேம்படுத்தப்பட்டு பிணைய துணையை QLogic iSCSI தகவிகளுக்கு iSCSI இல்லாமல் வழங்குகிறது.

  • Intel PRO/Wireless 3945ABG பிணைய இயக்கி: பதிப்பு 1.2.0.க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல சிக்கல்களை தீர்க்கிறது, அதாவது ஒரு மென்மையான பூட்டு பிழை சில மடிக்கணினிகளில் சில சமயம் ஏற்படுவதும் தீர்க்கப்பட்டது.

  • qla2xxx: இயக்கி பதிப்பு 8.01.07-k6க்கு மேம்படுத்தப்பட்டது. இது பல மாற்றங்களை செயல்படுத்துகிறது:

    • iIDMA இப்போது துணைபுரிகிறது

    • பின்வரும் Fibre தட அளவுருக்கள் இப்போது துணைபுரிகிறது:

      • symbolic nodename

      • கணினி புரவலன் பெயர்

      • fabric பெயர்

      • புரவலன் துறை நிலை

    • trace-control async நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதில்லை

    • reset handling logic சரி செய்யப்பட்டது

    • MSI-X இப்போது துணைபுரிகிறது

    • IRQ-0 திட்டங்கள் இப்போது ஒரு கணினிக்கு கையாளப்படுகிறது

    • NVRAM மேம்படுத்தல்கள் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது

IPMI

இந்த வெளியீடு ஒரு IPMI இயக்கியின் மேம்படுத்தலை கொண்டுள்ளது, இது பதிப்பு 2.6.21.3 என மாற்றங்களுடன், சில பின்னிணைப்புடன் 2.6.22-rc-4லிருந்து எடுக்கப்பட்டது. இந்த மேம்படுத்தல் பின்வரும் மாற்றங்களை கொண்டுள்ளது (பிறவற்றையும் சேர்த்து):

  • ipmi_si_intf இல் ஆரம்பிக்கப்படாத தரவு பிழை சரி செய்யப்பட்டது

  • வேறு இயக்கி தடங்கலுக்கு துணைபுரிந்தால் kipmid துவக்கப்படாது

  • பயனர்கள் இப்போது கர்னல் டீமானில் force_kipmid வழியாக enable செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்

  • per-channel கட்டளை பதிவு இப்போது துணைபுரிகிறது

  • MAX_IPMI_INTERFACES இனி பயன்படுத்தப்படமாட்டாது

  • hot system முகப்பு நீக்கல் இப்போது துணைபுரிகிறது

  • ஒரு பராமரிப்பு முறை firmware மேம்படுத்தலுக்கு சேர்க்கப்பட்டுள்ளது

  • poweroff துணை pigeonpoint IPMC க்கு சேர்க்கப்பட்டுள்ளது

  • BT துணை இயக்கி இப்போது நீண்ட நேரத்திற்கு வருகிறது

  • சேர்க்கப்பட்ட pci_remove நீக்குதலில் சரியாக கையாளுகிறது

புதிய தொகுதி அளவுருக்களை பற்றிய தகவலுக்கு, /usr/share/doc/kernel-doc-<kernel version>/Documentation/IPMI.txtஐ பார்க்கவும்.

SCSI
  • இந்த வெளியீட்டில் SCSI blacklist Red Hat Enterprise Linux 4 லிருந்து நிறுவப்பட்டது.

  • PCI IDs aic79xx இயக்கிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

  • aacraid இயக்கி: பதிப்பு 1.1.5-2437க்கு மேம்படுத்தப்பட்டு PRIMERGY RX800S2 மற்றும் RX800S3க்கு துணைபுரிகிறது.

  • megaraid_sas இயக்கி: பதிப்பு 3.10க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் bios_param இன் ஆரம்பப்புள்ளியாக குறிப்பிடப்படப்பட்டு, ஒரு IOCTL நினைவகத்தை சேர்த்து, சில சிறிய பிழைகளை சரி செய்கிறது.

  • Emulex lpfc இயக்கி: பதிப்பு 8.1.10.9க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல மாற்றங்களை கொண்டுள்ளது:

    • host_lock மேலாண்மையை ioctl பாதைகளில் சரி செய்தது

    • AMD சிப்செட் இப்போது தானாக கண்டுபிடிக்கப்பட்டு, DMA அளவை 1024 பைட்டுக்கு குறைத்தது

    • கண்டுபிடிப்பு செயலில் இருக்கும் போது dev_loss_tmo இன் போதும் முனைகள் நீக்கப்படாது

    • 8GB இணைப்பு வேகம் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது

  • qla4xxx இயக்கி மேம்படுத்தல் பின்வரும் மாற்றங்களை கொண்டுள்ளது:

    • IPV6, QLE406x மற்றும் ioctl தொகுதிக்கு துணை சேர்க்கப்பட்டது

    • ஒரு mutex_lock பிழை சரி செய்யப்பட்டது

    • முகப்பை ஏற்றும்/இறக்கும் போது தீர்க்கப்பட்ட qla4xxx மற்றும் qla3xxx சிக்கல்கள்

  • mpt fusion இயக்கிகள்: பதிப்பு 3.04.04க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல மாற்றங்களை கொண்டுள்ளது:

    • பல பிழை கையாளும் பிழைகள் திருத்தப்பட்டது

    • mptsas இப்போது தொடர் இலக்கு மீண்டும் அமைக்கப்பட்டது

    • mptsas மற்றும் mptfc இப்போது LUNs மற்றும் 255க்கு அதிகமாக உள்ள இலக்குகளுக்கு துணைபுரிகிறது

    • ஒரு LSI mptspi இயக்கியில் டிவிடி இயக்கியின் செயல்பாடு மிகவும் மெதுவாக இருந்தது இப்போது சரி செய்யப்பட்டது

    • ஒரு LSI SCSI சாதனம் BUSY நிலையை கொடுக்கும் போது, I/O பல முயற்சிக்குப் பின் செயலிழக்கப்படுவதில்லை

    • RAID வரிசைகள் தானாக-மீண்டும் உருவாக்கப்பட்ட பின் இல்லை

  • arcmsr இயக்கி: Areca RAID கட்டுப்படுத்திகளுக்கு துணைபுரிய சேர்க்கப்பட்டுள்ளது.

  • 3w-9xxx தொகுதி: 3ware 9650SEக்கு சரியாக துணைபுரிய மேம்படுத்தப்பட்டது

கர்னல் தொடர்புடைய மேம்படுத்தல்கள்

  • CIFS கிளையன் பதிப்பு 1.48aRHக்கு மேம்படுத்தப்பட்டது. இது 1.48a வெளியீட்டை அடிப்படையாக கொண்டு பின்வரும் மாற்றங்களை கொண்டிருக்கும்:

    • mount விருப்பம் sec=none ஒரு பெயரற்ற mountஐ கொடுக்கிறது

    • CIFS இப்போது umaskஐ POSIX விரிவாக்கங்களை செயல்படுத்தும் போது அங்கீகரிக்கிறது

    • sec= mount விருப்பங்கள் பாக்கெட் கையொப்பமிடுதலை சரி செய்தது

    EMC Celerra ன் பயனர்கள் (NAS Code 5.5.26.x மற்றும் கீழேயுள்ளது), CIFS கிளையன் EMC NASஐ பகிரும் போது செயலிழக்கப்படும். இந்த சிக்கல் பின்வரும் கர்னல் செய்திகளால் வகைப்படுத்தப்படும்:

    kernel:  CIFS VFS: server not responding
    kernel:  CIFS VFS: No response for cmd 162 mid 380
    kernel:  CIFS VFS: RFC1001 size 135 bigger than SMB for Mid=384
    

    ஒரு CIFS ஏற்றத்திற்கு பின், எந்த கோப்பினையும் வாசிக்க/எழுத முடியாது மற்றும் எந்த பயன்பாடும் ஒரு I/Oஐ ஏற்றப்புள்ளியில் முயற்சித்தால் செயலிழக்கப்படும். இந்த சிக்கலை தீர்க்க, NAS Code 5.5.27.5 அல்லது அடுத்ததிற்கு மேம்படுத்த வேண்டும் (EMC Primus case எண் emc165978ஐ பயன்படுத்தவும்).

  • MODULE_FIRMWARE ஒட்டுக்கள் இப்போது துணைபுரிகிறது.

  • ICH9 கட்டுப்படுத்திகள் இப்போது துணைபுரிகிறது.

  • Greyhound செயலிகள் இப்போது CPUID அழைப்புகளில் துணைபுரிகிறது.

  • Oprofile இப்போது புதிய Greyhound செயல்திறன் எண்ணிக்கை நிகழ்வுகளுக்கு துணைபுரிகிறது.

  • Directed DIAG இப்போது z/VM வசதியை மேம்படுத்த துணைபுரிகிறது.

  • Intel வரைகலை சிப்செட் DRM கர்னல் தொகுதி வழியாக இப்போது துணைபுரிகிறது. மேலும், DRM API பதிப்பு 1.3க்கு மேம்படுத்தப்பட்டு நேரடியாக பயன்படுகிறது.

  • ACPI மின் மேலாண்மை மேம்படுத்தல் S3 suspend-to-RAM மற்றும் S4 hibernate என மேம்படுத்தப்பட்டுள்ளது.

வேறு மேம்படுத்தல்கள்

  • gaim இப்போது pidgin என அழைக்கப்படுகிறது.

  • Intel microcode பதிப்பு 1.17க்கு மேம்படுத்தப்பட்டது. இது புதிய Intel செயலிகளுக்கு துணை புரிகிறது.

  • active-active dm-multipath ஐ பயன்படுத்தி EMC Clariionஇல் சேமிப்பகம் இப்போது துணைபுரிகிறது.

  • சீன எழுத்துரு Zysong fonts-chinese தொகுப்பின் பகுதியாக இனி நிறுவப்படுவதில்லை. Zysong இப்போது தனியாக fonts-chinese-zysong என தொகுக்கப்பட்டுள்ளது. fonts-chinese-zysong தொகுப்பு Supplementary CDஇல் இருக்கும்.

    fonts-chinese-zysong தொகுப்பு சீன தேசிய தரப்படுத்தப்பட்ட GB18030க்குத் துணைபுரிய வேண்டும் என்பதைக் குறித்து கொள்ளவும்.

  • Challenge Handshake Authentication Protocol (CHAP) பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஒவ்வொன்றும் 256 எழுத்துகள் வரம்பு கொண்டுள்ளது.

  • pump இந்த வெளியீட்டில் நீக்கப்பட்டது. இங்கு, உங்கள் பிணைய முகப்பைnetconfig மூலம் கட்டமைக்கும் போது ifcfg உரை செயலிழக்கப்படும்.

    உங்கள் பிணைய முகப்பை சரியாக கட்டமைக்க, system-config-networkஐ பயன்படுத்தவும். மேம்படுத்தப்பட்ட system-config-network தொகுப்பை நிறுவனால் netconfigஐ நீக்குகிறது.

  • rpm --aid க்கு துணைபுரிவதில்லை. நீங்கள் தொகுப்புகளை நிறுவும் போதும் மேம்படுத்தும் போதும்yum ஐ பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகள் தற்போது Red Hat Enterprise Linux 5.1 சந்தா சேவையின் கீழ் துணைபுரியவில்லை, இது முழுவதும் செயல்படவில்லை மற்றும் தயாரிப்புக்கு இது பொதுவாக பொருந்துவதில்லை. எனினும், இந்த வசதிகள் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தவும் பரந்த அளவில் பயன்படுத்தவும் சேர்க்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த வசதி தயாரிப்பில்லாத சூழலில் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறிவார்கள். மேலும் இது முழுவதுமாக துணைபுரியாமல் தொழில்நுட்ப முன்பார்வையாக இருக்கும் போதே வாடிக்கையாளர் தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். அதிக முக்கியத்துவமான சிக்கல்களுக்கு பிழைத்திருத்தங்கள் வழங்கப்படும்.

தொழில்நுட்ப முன்பார்வையின் முழு வளர்ச்சியிலும், அதன் கூடுதல் கூறுகள் பொதுவாக சோதனை செய்ய கிடைக்கும். இது இனிவரும் சிறிய அல்லது பெரிய வெளியீடுகளில் தொழில்நுட்ப முன்பார்வைக்கு முழு துணைபுரிவது Red Hat இன் உள்நோக்கமாகும்.

நிலையற்ற லினக்ஸ்

நிலையற்ற லினக்ஸ் என்பது ஒரு கணினி எவ்வாறு இயங்கி, மேலாண்மை செய்யப்படுகிறது, எளிய வாய்ப்பளித்தலுக்கு வடிவமைத்தல் மற்றும் எளிமையாக பல கணினிகளை மாற்ற மேலாண்மை செய்தல் என்பது போன்ற புதிய எண்ணங்களை கொண்டுள்ளது. இது தயாரிக்கப்பட்ட எழுதும் கோப்புகளை குறுவட்டில் எழுத அதிக அளவு நிலையற்ற கணினிகள் மேலாண்மை செய்ய இயக்கத்தளத்தை வாசிப்பு-மட்டும் முறையில் இயங்குவது இதன் முதல் கட்ட பணியாகும் (மேலும் விவரங்களுக்கு, /etc/sysconfig/readonly-root ஐ பார்க்கவும்).

இதன் நடப்பு நிலை வளர்ச்சியில், நிலையற்ற வசதி உள்ளிடப்பட்ட இலக்குகளின் துணை அமைப்புகளாகும். அதே போல, தொழில்நுட்ப முன்பார்வை நிலை என அதன் செயல்திறன் பெயரிடப்பட்டுள்ளது.

பின்வருவன Red Hat Enterprise Linux 5 இல் சேர்க்கப்பட்டுள்ள துவக்க செயல்திறன்களின் பட்டியலாகும்:

  • NFS மீது ஒரு நிலையற்ற உருவை இயக்குகிறது

  • NFS மீது ஒரு நிலையற்ற உருவை சுற்றுப்பாதை வழியாக இயக்குகிறது

  • iSCSI இல் இயங்குகிறது

http://fedoraproject.org/wiki/StatelessLinuxHOWTOஇல் நிலையற்ற குறியீடு படிப்பினை எவ்வாறு சோதிக்க வேண்டும் என்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் [email protected]இல் சேரவும்.

Stateless Linux க்கு வடிவமைப்பு Red Hat Enterprise Linux 5 இல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

AIGLX

AIGLX என்பது தொழில்நுட்ப முன்பார்வை வசதியாகும் அல்லது இது X serverக்கு முழு துணைபுரியும். இதன் நோக்கம் GL-accelerated தோற்றங்களை தரப்படுத்தப்பட்ட பணிமேடைகளில் செயல்படுத்துவதாகும். இந்த திட்டம் பின்வருவனவற்றை கொண்டுள்ளது:

  • சிறிது மாற்றப்பட்ட X server

  • ஒரு மேம்படுத்தப்பட்ட மீசா தொகுப்பு ஒரு புதிய நெறிமுறை துணையை சேர்க்கிறது

இந்த கூறுகளை நிறுவினால், நீங்கள் GL-accelerated தோற்றங்களை மிகச் சில மாற்றங்களுடன் பணிமேடை தோன்றும், மேலும் உங்கள் X server ஐ மாற்றாமல் இதனை செயல்படுத்த அல்லது செயல்நீக்க முடியும். AIGLX ம் தொலை GLX பயன்பாடுகளை செயல்படுத்திவன்பொருள் GLX முடுக்கத்தில் பயன்படுத்தலாம்.

devicescape (d80211)

devicescape ஸ்டேக் iwlwifi 4965GN வடமில்லா இயக்கியை செயல்படுத்துகிறது. இந்த ஸ்டேக் சில வடமில்லா சாதனங்களை எந்த Wi-Fi பிணையத்திற்கும் இணைக்க அனுமதிக்கிறது.

இந்த ஸ்டேக் ஒரு குறியீடு அடிப்படையான சேவையகத்தில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கூடுதலாக, இந்த ஸ்டேக்கின் நிலைப்பு தன்மை சோதனை மூலம் சரி செய்யப்படுகிறது. எனினும், இந்த ஸ்டேக் இந்த வெளியீட்டில் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டது.

FS-Cache

FS-Cache என்பது தொலை கோப்பு முறைமைகளுக்கு உள்ளமை இடையக வசதியாகும்; இது பயனர்களை NFS தரவுகளை உள்ளமைவாக ஏற்றப்பட்ட வட்டில் இடையகம் செய்ய அனுமதிக்கிறது. FS-Cache வசதியை அமைக்க, cachefilesd RPM ஐ நிறுவி /usr/share/doc/cachefilesd-<version>/README இல் உள்ள தகவல்களை பார்க்கவும்.

<version>ஐ நிறுவப்பட்ட cachefilesd தொகுப்பின் தொடர்புடைய பதிப்பால் மாற்றவும்.

Systemtap

Systemtap இலவச மென்பொருள் (GPL) அமைப்பை இயங்கும் லினக்ஸ் கணினி பற்றிய தகவல்களை சேகரிக்க கொடுக்கிறது. இது செயல்திறன் அல்லது செயல்பாட்டு சிக்கல்களை கண்டறிய துணைபுரிகிறது. systemtap இன் உதவியால், மென்பொருளாளர்கள் மறு மொழிபெயர்த்தல், நிறுவுதல் மற்றும் மறுதொடக்க வரிசையை பின்பற்ற வேண்டாம் அல்லது தரவுகளை சேகரிக்க வேண்டிய வரும்.

iSCSI இலக்கு

Linux target (tgt) சட்ட வேலை ஒரு கணினியை தொகுதி நிலையில் SCSI சேமிப்பகத்தை வேறு கணினிகளில் ஒரு SCSI துவக்கியை அனுமதிக்கிறது. இந்த செயல்திறன் ஒரு லினக்ஸ் iSCSI இலக்குக்கு வரிசைப்படுத்தப்பட்டு, ஏதாவது iSCSI துவக்கி பிணையம் வழியாக சேமிப்பகத்தை ஒடுகிறது.

iSCSI இலக்கை அமைக்க, scsi-target-utils RPM ஐ நிறுவவும் மற்றும் விவரங்களை பார்க்கவும்:

  • /usr/share/doc/scsi-target-utils-<version>/README

  • /usr/share/doc/scsi-target-utils-<version>/README.iscsi

<version> ஐ நிறுவப்பட்ட தொடர்புடைய பதிப்பால் மாற்றவும்.

மேலும் விவரங்களுக்கு, man tgtadmஐ பார்க்கவும்.

FireWire

firewire-sbp2 தொகுதி இந்த மேம்படுத்தலில் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி FireWire சேமிப்பக சாதனங்கள் மற்றும் வருடிகளுடன் இணைக்கிறது.

இப்போது, FireWire பின்வருவனவற்றுக்கு துணைபுரியாது:

  • IPv4

  • pcilynx புரவலன் கட்டுப்படுத்திகள்

  • multi-LUN சேமிப்பக கருவிகள்

  • சேமிப்பக சாதனங்களுக்கு எல்லையற்ற அணுகல் வழங்குப்படுகிறது

கூடுதலாக, FireWireஇன் இந்த பதிப்பில் பின்வரும் சிக்கல்கள் உள்ளன:

  • ஒரு நினைவக கசிவு SBP2 இயக்கியில் ஏற்பட்டு கணினியை நிலையற்ற தன்மையை கொடுக்கிறது.

  • இந்தப் பதிப்பில் ஒரு குறியீடு பெரிய கணினிகளில் சரியாக வேலை செய்யவில்லை. இது PowerPC இல் எதிர்பாராத பண்பினை கொடுக்கிறது.

தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

  • ஒரு SATA பிழை SATA-உள்ள கணினிகளில் துவக்கும் போது இடைநிறுத்தப்பட்டு, தொடரும் போது தோன்றும் பிழை இப்போது திருத்தப்பட்டது.

  • பல இயக்கத்தள கணினிகளில், parted இப்போது முதல் முதன்மை பகிர்வில் ஆரம்ப பிரிவில் காக்கிறது, இங்கு Windows Vista™ நிறுவப்பட்டிருக்கும். இங்கு, பல இயக்கத்தளங்கள் உள்ள கணினியில் Red Hat Enterprise Linux 5.1 மற்றும் Windows Vista™ நிறுவப்பட்டிருந்தால், பின்னர் நிறுவியது துவக்கப்படாமல் இருக்கும்.

  • rmmod xennet domU ஐ எப்போதும் அழிக்க அனுமதிப்பதில்லை.

  • 4-சாக்கெட் AMD Sun Blade X8400 Server Module கணினிகள் நினைவகம் node 0 இல் கட்டமைக்கப்படாமல் துவக்கும் போது பீதியடைய வேண்டாம்.

  • conga மற்றும் luci இப்போது செயற்களத்தை உருவாக்கி கட்டமைக்க பயன்படுகிறது.

  • Cluster Storage குழுவை yumஐ பயன்படுத்தி நிறுவும் போது, அவை செயலிழக்கப்படுவதில்லை.

  • நிறுவலின் போது, தவறான SELinux சூழல்கள் /var/log/faillog மற்றும் /var/log/tallylog க்கு ஒதுக்ககப்படவில்லை.

  • dual-core AMD கணினியில், cpu-அவசர செயல்பாடு ஒற்றை cpuஇல் CPU கோரில் அலைவரிசைகளை மாற்றவில்லை.

  • பிரித்து நிறுவல் ஊடகம் மூலம் Red Hat Enterprise Linux 5.1ஐ நிறுவும் போது (எடுத்துக்காட்டாக, குறுவட்டு அல்லது NFSISO), amanda-server ஐ நிறுவும் போது ஏற்பட்ட பிழை சரி செய்யப்பட்டது.

  • நிறுவலின் போது, Anaconda இப்போது 4GBக்கு அதிகமாக RAMஐ எடுக்கிறது. இது Anacondaவை தானாக கர்னலின் kernel-PAE மாறியை நிறுவ வேண்டுமா அல்லது வேண்டாமா என அனுமதிக்கிறது.

  • EDAC கடைசியான k8 செயலிகளில் இப்போது சரியான அளவு நினைவகத்தை அறிக்கையிடுகிறது.

  • Gnome பணிமேடையில் gdm வழியாக புகுபதிவு செய்யும் போது அதன் திரை செயலிழக்கபடுவது சரி செய்யப்பட்டது.

  • ஒரு autofs பிழை நன்றாக வேலை செய்வதிலிருந்து பல ஏற்றுதல்களை தடுப்பது இப்போது சரி செய்யப்பட்டது.

  • பல பின்னிணைப்புகள் utraceக்குப் பின்வரும் திருத்தங்களை கொண்டுள்ளது:

    • ptraceஐ பயன்படுத்தும் போது அழிக்கப்படும் ஒரு பிழை சரி செய்யப்பட்டது

    • பிழையான EIO சில PTRACE_PEEKUSR அழைப்புகளில் வருவது சரி செய்யப்பட்டது

    • சில சமயங்களில் ஒரு சேய் வெளியேறும் போது wait4 அழைப்புகளை தடுப்பது சரி செய்யப்பட்டது.

    • ஒரு பணியை முடிப்பதிலிருந்து SIGKILL தடுப்பது இப்போது சரி செய்யப்பட்டது. இது சில சமயங்களில் ptrace நிகழும் போது ஏற்படுகிறது.

  • ஒரு RealTime Clock (RTC) பிழை அலாரங்கள் மற்றும் காலஅளவு RTC தடங்கல்களை தடுப்பது இப்போது சரி செய்யப்பட்டது.

தெரிந்த பிரச்சனைகள்

  • முதல் முறை வெளியீட்டு அறிக்கை பொத்தான் Anacondaவில் சொடுக்கப்படும் போது, அது சாளரத்தில் தோன்றும் போது ஒரு தாமதம் ஏற்படும். இந்த தாமதத்தில், ஒரு வெற்று பட்டியல் சாளரத்தில் தோன்றும். இது வேகமாக முடிகிறது, அதனால் பல பயனர்கள் இதனை காண்பதில்லை.

    இந்த தாமதம் தொகுப்பு நிறுவல் நிலை CPU-அவசர நிலையில் நிறுவியிருப்பதால் இருக்கலாம்.

  • புரவலன் வட தகவிகள் MegaRAID இயக்கியை பயன்படுத்துவது "Mass Storage" போட்டியிடும் முறையில் செயல்பட அமைக்கப்பட வேண்டும், "I2O" போட்டியிடும் முறையில் வேண்டாம். இதனை செய்ய பின்வரும் படிநிலைகளை செய்யவும்:

    1. MegaRAID BIOS Set Up Utilityஐ உள்ளிடவும்.

    2. தகவி அமைவுகள் பட்டியை உள்ளிடவும்.

    3. வேறு தகவி விருப்பங்கள் கீழ், Emulation ஐ தேர்ந்தெடுத்து Mass Storage க்கு அமைக்கவும்.

    தகவி "I2O" போட்டியிடுவதில் தவறாக அமைக்கப்பட்டால், கணினி i2o இயக்கியை ஏற்ற முயற்சிக்கும். இது செயலிழக்கப்பட்டு, சரியான இயக்கியை ஏற்றாமல் தடுக்கும்.

    முந்தைய Red Hat Enterprise Linux வெளியீடு பொதுவாக I20 இயக்கியை MegaRAID இயக்கி ஏற்றுவதற்கு முன் ஏற்ற முயற்சிக்காது. அதுபோல, லினக்ஸில் பயன்படுத்தும் போது வன்பொருள் எப்போதும் "Mass Storage" போட்டியிடும் முறையில் அமைக்கப்பட வேண்டும்.

  • Cisco Aironet MPI-350 வடமில்லா அட்டையை கொண்ட மடிக்கணினிகள் ஒரு DHCP முகவரியை பிணைய அடிப்படையான நிறுவலில் வடமுள்ள ஈத்தர்நெட் துறையை பயன்படுத்தும் போது செயலிழக்கப்படுகிறது.

    இதில் பணிபுரிய, உங்கள் நிறுவலில் உள்ளமை ஊடகத்தை பயன்படுத்தவும். மாற்றாக, நீங்கள் வடமில்லா அட்டையை மடிக்கணினி BIOS இல் நிறுவலுக்கு முன் செயல்நீக்கலாம் (நிறுவல் முடிந்தவுடன் மீண்டும் வடமில்லா அட்டையை செயல்படுத்தலாம்).

  • தற்போது, system-config-kickstart தொகுப்பு தேர்ந்தெடுத்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு துணைபுரிவதில்லை. system-config-kickstartஐ பயன்படுத்தும் போது, Package Selection விருப்பம் செயல்நீக்கத்தில் உள்ளது என குறிப்பிடுகிறது. ஏனெனில், system-config-kickstart yum ஐ பயன்படுத்தி குழு தகவல்களை பெறுகிறது, ஆனால் அது yumஐ கட்டமைக்க முடியாமலும், Red Hat Network உடன் இணைக்க முடியாமல் உள்ளது.

    தற்போது, நீங்கள் கைமுறையாக கிக்ஸ்டார்ட் கோப்புகளை தொகுப்பு பிரிவில் மேம்படுத்த வேண்டும். system-config-kickstart ஐ பயன்படுத்தி கிக்ஸ்டார்ட் கோப்பினை திறக்கும் போது, அது அனைத்து தொகுப்பின் தகவலையும் பாதுகாத்து, நீங்கள் சேமிக்கும் போது அதனை எழுதுக்கொள்ளும்.

  • துவக்க நேரம் /var/log/boot.log க்கு புகுபதிவு செய்வது இந்த Red Hat Enterprise Linux 5 வெளியீட்டில் இல்லை. இதற்கு சமமான செயல்பாடு எதிர்கால மேம்படுத்தலில் சேர்க்கப்படும்.

  • Red Hat Enterprise Linux 4 லிலிருந்து Red Hat Enterprise Linux 5 க்கு ஏற்றும் போது, வரிசைப்படுத்தல் கையேடு தானாக நிறுவப்படுவதில்லை. நீங்கள் pirut ஐ பயன்படுத்தி மேம்படுத்தல் முடிந்ததும் கைமுறையாக நிறுவ வேண்டும்.

  • X இயக்கத்தில் இருந்து vesa தவிர வேறு இயக்கியை பயன்படுத்தி இருந்தால், kexec/kdump கர்னல் கணினி மறுதுவக்கம் செய்யாமல் இருக்கலாம். இந்த சிக்கல் ATI Rage XL வரைகலை சிப்செட்டில் மட்டுமே உள்ளது.

    X ATI Rage XL உள்ள கணினியில் இயங்கும் போது, kexec/kdump இல் மறுதுவக்கம் செய்யும் போது சிக்கல் வராமல் இருக்க, அது vesa இயக்கியை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

  • Red Hat Enterprise Linux 5 ஐ nVidia CK804 சிப்செட் கொண்ட கணினிகளில் பயன்படுத்தும் போது, பின்வருவது போல கர்னல் செய்தி பெறப்படும்:

    kernel: assign_interrupt_mode Found MSI capability
    kernel: pcie_portdrv_probe->Dev[005d:10de] has invalid IRQ. Check vendor BIOS
    

    இந்த செய்திகள் சில PCI-E துறைகள் IRQகளுக்கு கோரப்படுவதில்லை என குறிப்பிடுகிறது. எனினும், இந்த செய்திகள் எப்போதும் கணினியின் செயல்பாட்டை பாதிப்பதில்லை.

  • நீக்கக்கூடிய சேமிப்பக சாதனங்கள் (குறுவட்டுகள் மற்றும் டிவிடிகள் போன்றவை) நீங்கள் ரூட்டாக புகுபதிவு செய்யும் போது தானாக ஏற்றப்படாது. இப்போது, நீங்கள் வரைகலை கோப்பு மேலாளர் மூலம் கைமுறையாக ஏற்ற வேண்டும்.

    மாற்றாக, நீங்கள் பின்வரும் கட்டளையை ஒரு சாதனத்தை /mediaக்கு ஏற்ற இயக்கவும்:

    mount /dev/<device name> /media
    
  • IBM System z ஒரு மரபார்ந்த யுனிக்ஸ் தோற்ற பருநிலை பணியகத்தை வழங்காது, எனினும் IBM System zக்கு Red Hat Enterprise Linux 5 firstboot செயல்பாட்டில் துவக்க நிரலை ஏற்றும் போது துணைபுரியாது.

    சரியாக IBM System z இல் Red Hat Enterprise Linux 5 ஐ துவக்க , நிறுவலுக்கு பின் பின்வரும் கட்டளைகளை இயக்கவும்:

    • /usr/bin/setupsetuptool தொகுப்பால் வழங்கப்படுகிறது

    • /usr/bin/rhn_registerrhn-setup தொகுப்பால் வழங்கப்படுகிறது

  • Red Hat Enterprise Linux 5இலிருந்து Red Hat Enterprise Linux 5.1க்கு Red Hat Network வழியாக மேம்படுத்தும் போது, yum உங்களை redhat-beta விசையை கேட்காமல் செல்லலாம். இப்போது, நீங்கள் redhat-beta விசையை மேம்படுத்தும் முன் ஏற்ற வேண்டும். இதனை செய்ய பின்வரும் கட்டளையை இயக்க வேண்டும்:

    rpm --import /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-beta

  • ஒரு LUN கட்டமைக்கப்பட்ட பைலரில் அழிக்கப்படும் போது, புரவலனில் மாற்றம் வராது. இதனால், lvm கட்டளைகள் dm-multipath பயன்படுத்தும் போது செயலிழக்கப்படும், LUN இப்போது stale என மாறியது.

    இதில் பணிபுரிய, அனைத்து சாதனங்கள் மற்றும் mpath இணைப்பு உள்ளீடுகளை /etc/lvm/.cache stale LUNஇல் குறிப்பிட்டது போல அழிக்க வேண்டும்.

    இந்த உள்ளீடுகளை கண்டுபிடிக்க, பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி செய்யவும்:

    ls -l /dev/mpath | grep <stale LUN>

    எடுத்துக்காட்டாக, <stale LUN> என்பது 3600d0230003414f30000203a7bc41a00 எனில், பின்வரும் தீர்வு தோன்றும்:

    lrwxrwxrwx 1 root root 7 Aug  2 10:33 /3600d0230003414f30000203a7bc41a00 -> ../dm-4
    lrwxrwxrwx 1 root root 7 Aug  2 10:33 /3600d0230003414f30000203a7bc41a00p1 -> ../dm-5
    

    அதாவது 3600d0230003414f30000203a7bc41a00 என்பது இரண்டு mpath இணைப்புகள்: dm-4 மற்றும் dm-5 உடன் இணைக்கப்பட வேண்டும்.

    இதுபோல, பின்வரும் வரிகள் /etc/lvm/.cache இலிருந்து அழிக்கப்பட வேண்டும்:

    /dev/dm-4 
    /dev/dm-5 
    /dev/mapper/3600d0230003414f30000203a7bc41a00
    /dev/mapper/3600d0230003414f30000203a7bc41a00p1
    /dev/mpath/3600d0230003414f30000203a7bc41a00
    /dev/mpath/3600d0230003414f30000203a7bc41a00p1
    
  • முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட Windows™ ஐ குறுவட்டு / டிவிடி மூலம் உருவாக்க முயற்சிக்கும் போது, விருந்தினரின் இரண்டாம் நிலை நிறுவல் மறுதுவக்கும் போது தொடராது.

    இதில் பணிபுரிய, /etc/xen/<name of guest machine> குறுவட்டு / டிவிடி சாதனங்களுக்கு சரியாக சேர்ப்பது மூலம் திருத்தவும்.

    ஒரு நிறுவலில் மெய்நிகர் சாதனமாக ஒரு சாதாரண கோப்பு பயன்படுத்தப்பட்டால், disk வரி /etc/xen/<name of guest machine> பின்வருமாறு வாசிக்கப்படும்:

    disk = [ 'file:/PATH-OF-SIMPLE-FILE,hda,w']
    

    ஒரு டிவிடி-ரோம் சாதனம் /dev/dvd இல் புரவலனாக இருப்பது நிலை 2 நிறுவலில் hdc இருக்கும் அதனை உள்ளீடு 'phy:/dev/dvd,hdc:cdrom,r' போல சேர்க்க வேண்டும். அதுபோல, வட்டு வரி பின்வருமாறு வாசிக்கப்பட வேண்டும்:

    disk = [ 'file:/opt/win2003-sp1-20061107,hda,w', 'phy:/dev/dvd,hdc:cdrom,r']
    

    உங்கள் வன்பொருளை பொருத்து பயன்படுத்தும் சாதன பாதை மாற்றப்படுகிறது.

  • sctp தொகுதி கர்னலில் சேர்க்கப்படவில்லை எனில், netstat-A inet அல்லது -A inet6 விருப்பத்துடன் இயங்குவது பின்வரும் செய்தியுடன் அசாதாரணமாக முடிவுறும்:

    netstat: இந்த கணினியில் `AF INET (sctp)' துணை இல்லை.        
    

    இதனை தவிர்க்க, sctp கர்னல் தொகுதியை நிறுவவும்.

  • நடப்பு கர்னல்கள் Data Terminal Ready (DTR) சிக்னல்களை துவக்கும் நேரத்தின் போது தொடர் துறைகளில் அச்சிடும் முன் ஒன்றும் செய்யாது. DTR சில சாதனங்களுக்கு தேவைப்படுகிறது; தீர்வாக, கர்னல் துவக்க செய்திகள் சில சாதனங்களில் தொடர் பணியகங்களில் அச்சிடாது.

  • AMD 8132 மற்றும் HP BroadCom HT100 சில இயக்கத்தளங்களில் பயன்படுத்துவது (HP dc7700 போன்று) MMCONFIG சுழற்சிகள் துணைபுரிவதில்லை. உங்கள் கணினி சிப்செட் பயன்படுத்தினால், உங்கள் PCI கட்டமைப்பு PortIO CF8/CFC நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனை கட்டமைக்க, கர்னல் அளவுருக்களுடன் -pci nommconfig கணினியை துவக்கி pci=nommconfஐ GRUBஉடன் மீண்டும் துவக்கும் போது சேர்க்க வேண்டும்.

    மேலும், AMD 8132 சிப்செட் support Message Signaled Interrupts (MSI)க்கு துணைபுரியாது. உங்கள் கணினி இந்த சிப்செட்டை பயன்படுத்தினால், நீங்கள் MSIஐ செயல்நீக்கம் செய்ய வேண்டும். இதனை செய்ய, நிறுவும் போது கர்னல் மதிப்பாக -pci nomsiஐ பயன்படுத்தவும் மற்றும் pci=nomsi ஐ GRUB இல் மீண்டும் துவக்கும் போது சேர்க்கவும்.

    எனினும், உங்கள் குறிப்பிட்ட இயக்கத்தளம் ஏற்கனவே கர்னல் பட்டியலில் இருந்தால், உங்கள் கணினிக்கு pci கர்னல் அளவுருக்கள் தேவையில்லை. பின்வரும் HP தளங்கள் ஏற்கனவே கர்னலால் பட்டியலிடப்பட்டுள்ளது:

    • DL585g2

    • dc7500

    • xw9300

    • xw9400

  • bare-metal (மெய்நிகரில்லாத) கர்னலை இயக்கும் போது, X சேவையகம் EDID தகவலை திரையகத்திலிருந்து பெற முடியாது. இது ஏற்படும் போது, வரைகலை இயக்கி 800x600 க்கு அதிகமான திரைதிறனுக்கு மேல் காட்ட முடியவில்லை.

    இதில் பணிபுரிய, பின்வரும் வரியை ServerLayoutக்கு /etc/X11/xorg.conf பிரிவில் சேர்க்கவும்:

    விருப்பம் "Int10Backend" "x86emu"
    
  • Virtual Machine Manager (virt-manager) இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது பயனரை கூடுதல் துவக்க அளவுருக்களை பகுதி மெய்நிகராக்க விருந்தினர் நிறுவிக்கு பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இது நிறுவ சில அளவுருக்கள் பகுதி மெய்நிகாரக்க விருந்தினர்கள்க்கு குறிப்பிட்ட வன்பொருள் வகைக்கு தேவைப்படும் போது உண்மையாகும்.

    இந்த சிக்கல் virt-managerஇன் எதிர்வரும் வெளியீட்டில் அறிக்கையிடப்படும். பகுதி மெய்நிகராக்க விருந்தினர்கள் நிறுவும் போது கர்னல் அளவுருக்குள் குறிப்பிட virt-installஐ பயன்படுத்தவும்.

  • முன்னிருப்பு dm-multipath கட்டமைப்பில், Netapp சாதனங்கள் ஒரு முந்தைய தவறான பாதைக்கு பின் அதனை முடிக்க பல நிமிடங்கள் எடுக்கலாம். இந்த சிக்கலை சரி செய்ய, பின்வரும் Netapp சாதன கட்டமைப்பை devicesஇல் multipath.conf கோப்பு பிரிவில் சேர்க்கவும்:

    devices {
            device {
                    vendor                  "NETAPP"
                    product                 "LUN"
                    getuid_callout          "/sbin/scsi_id -g -u -s /block/%n"
                    prio_callout            "/sbin/mpath_prio_netapp /dev/%n"
                    features                "1 queue_if_no_path"
                    hardware_handler        "0"
                    path_grouping_policy    group_by_prio
                    failback                immediate
                    rr_weight               uniform
                    rr_min_io               128
                    path_checker            directio
            }
    

( x86 )



[1] இந்த விவரங்கள் Open Publication License, v1.0 இன் அடிப்படையிலான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வழங்கப்பட்டிருக்கலாம், இது http://www.opencontent.org/openpub/ இல் உள்ளது.